வீசப்படும் மலர்களிடையே கண் திறந்து பார்க்கிறாள் தேவி. செல்ல நடை தேவதைகள் கொலுசின் ஒலி நகைக்க வைக்கின்றன தூக்கம் வருது என தோள் சாய்கிறது குழந்தை முகம் வாடி மீண்டும் கல்லாகினாள் தேவி! ------------- அரிச்சுவடி வைத்திருந்தாள் அவள் இது ஆனா இது ஆவனா ஒவ்வொன்றாய் சொல்லி வந்தவள் பாதியில் மறந்துட்டேன் என்றாள் விடுபட்ட எழுத்துக்கள் தலை குனிந்து வெளியேறின! ----------------------------- வாணி விழா சின்ன பாதங்களில் சலங்கை கட்டி பெரிய கண்ணில் மையிட்டு தா தெய் தித் தெய் என கண்ணனை அழைக்கின்றாள் எம்மையும் அழைப்பாள் என மற்ற தெய்வங்கள் நிற்கின்றன வரிசையில்!
Wednesday, October 5, 2011
தேவதைகள்....2
Posted by Thenie at 3:38 AM 0 comments
Tuesday, October 4, 2011
தேவதைகள்
Posted by Thenie at 9:51 PM 4 comments
Labels: sarasvathi, thenie, thevathaikal
Wednesday, August 26, 2009
நாளை உலகம் அழியுமாம்
கால்கள் நடை
போட்டனநாம் கைகோர்த்து
காதல் பயணம் செய்த பாதைகளில்!
நீ பறித்து அணிவித்த
போகன்விலா மலர்
அதிக அழகாய் இருந்தது இன்று!
கடல் அலைகளின்
காதல் முயற்சி
ஜெயிக்குமெனஉள்ளம் சொல்கிறது இன்று!
நீ கட்டிய மணல் மாளிகையில்
மகாராணியாய் நானும்
காவலனாய் நீயும் காதல் செய்கிறோம் இன்றும்!
உன் தோளில் கை பத்தித்து
தாண்டிய தண்ட வாளங்களில்
தடுக்கி விழாமல் நடக்கிறேன் உன் நினைவில்!
ரயில் சில்லுகளின் நசுக்கி
நீ செய்த நாணய மோதிரம்
விரலினை அழுத்தியது உன் நினைவு போல!
உன்னோடு சண்டை போட்டு
உண்டது தொண்டையில் சிக்கியது
யாரோ கடித்து வீசிய சோளம் கண்ட போது!
வீசும் தென்றல் கூட
உன் சுவாசத்தைகொண்டு வந்தது
கத கதப்பாய்!
உன்னோடு நான் இருந்த
அத்தனை நொடிகளையும் கோர்த்து
மாலை செய்கிறேன்!
நாளைக்குள் நீ வருவாய்
நினைவு மாலை சூட்டியே
உனை மூர்ச்சையாக்குவேன்!
நாளை உலகம் அழியுமாம்
அழியட்டுமே எனக்கென்னநாம் தான்
யுகம் கடந்து வாழ்வோமே காதலுடன்!
Posted by Thenie at 11:40 PM 0 comments
பெண் குழந்தை
வாந்தி உயிர் எடுத்தது
கருதான் என்று முடிவானதும்
வலிகளை ஏற்க துணிந்தது உடல்
கண் இப்படி மூக்கு இப்படி
சிரிப்பு இப்படி என
பிஞ்சினை நெஞ்சில் நிறுத்தியது
உருவம் இல்லாத குழந்தை
ரோஸ் நிற உடையும்
தழுவல் நடையும்
கொஞ்சும் சிரிப்பும்
கொலுசுக் கால்களும்
பெண் குழந்தையே கனவில்
ஆசையாய் காத்திருந்து
வலிகளைப் பொறுத்து
தேவதையைக் கையில் வாங்கியதும்
வலி மறைந்தது அதன் அழகில்
பெண்தானா உனக்கும்
நமக்குத்தான் கொடுப்பினையே இல்லை
அம்மா சொன்ன போது
வலி அப்போது தெரிந்து
என் பிறப்புக்காய்!
Posted by Thenie at 11:21 PM 1 comments
தேவை
Posted by Thenie at 11:13 PM 0 comments
Wednesday, July 1, 2009
ஆனால் நீ
ஒற்றை ரோஜாவுடன்
கால் கடுக்க காத்திருக்கவில்லை நீ!
காத தூரம் போக
கெஞ்சி கொஞ்சியதில்லை நீ!
காலில் முள்படும் என்று
பாதையை திட்டியவனில்லை நீ!
பாதி குளிர்களியை
பறித்து உண்டதில்லை நீ!
விடிய விடிய குறுந்தகவல்
அனுப்பவில்லை நீ!
வேலை நேரத்தில் ஒன்றே ஒன்று என
முத்த சத்தம் கோரியதில்லை நீ!
ஆனால்
கண்களில் கண்ணீர் கண்டு
கைக்குட்டையானது உன் விரல்கள்!
துயரம் வரும் போது
சாய்ந்து கொள்ள தந்தாய் உன் தோள்!
தனிமையில் துவண்ட போது
கோர்த்துக் கொண்டது உன் கைகள்!
பரீட்சை நேரத்து கட்டாய உறக்கமும்
விடிகாலை விழிப்பும் உன் அழைப்பில்!
நோய் கண்ட போது
மருந்தாய் இருந்தது உன் பார்வை!
Posted by Thenie at 8:08 AM 2 comments
Monday, June 29, 2009
திருமணம்
நாம் பார்த்த நட்சத்திரங்கள்
அருந்ததிகளின் கூட்டாக இருக்கும்!
ஆழியில் விழுந்து குளித்தவர்கள் நாம்
கணையாழிதான் இல்லை!
வாடா மல்லிகையும் கடதாசிப்பூவும்
இயற்கை தந்த மாலையாய் இருந்தது!
ஓராயிரம் முறை சேர்த்து எழுத்தப்பட்டிருக்கும்
நம் பெயர்கள்!
உன் விரல் கோர்த்து நடந்த போது
காதல் அக்கினி வளர்த்துக் கொண்டிருந்தது!
காற்றும் நீரும் நிலமும் ஆசீர்வதித்தன!
மந்திரம் ஓதி முடித்திருந்தது இடியோசை !
புகைப்படம் எடுத்தது மின்னல்!
இனிதே நிறைவேறியது
நம் இருமனங்களின் சங்கமம்!
Posted by Thenie at 8:22 AM 2 comments
யாதுமாகினாய் நீ
Posted by Thenie at 8:18 AM 0 comments
Labels: ந்
Thursday, May 7, 2009
மழை

ஏய் வசீ உள்ளே வாங்க என் கத்திக் கொண்டே வருகிறேன்
மழையில் நனைந்து சிரித்தபடி கைகளில் தண்ணீர் ஏந்தி சிரிக்கிறான் அவன்.
வசி வேண்டாம்பா மழை ரொம்ப அதிகமா இருக்குள்ள அச்சாப்ப் பிள்ளையெல்லே
வீட்டுக்குள்ள வாங்கோ என இழுக்க போக என்னையும் சேர்த்து நனைய வைக்கிறான் என்
ஆறுவயதுப் பாலகன்.
வசீ வாங்கோ அப்பன், அப்பா வரும் நேரமாச்செல்லே உடுப்பு மாத்திட்டு நிண்டால்
அப்பாவோட வெளியே போகலாம் என பொய் சொல்கிறேன்.
போங்கம்மா நான் வரேலை அப்பாவையும் நனைய வைக்கப் போறேன் என்று சொல்லி மீண்டும்
நனைய.
எண்ட செல்லமெல்லே என்று அவனை தூக்கி வந்து அறைக்குள் விட்டு தலை துவட்டி
விடுகிறேன்.
அம்மா அப்பா இண்டைக்கு வந்துட்டு எப்ப போவார்? நாங்களும் அவரோட போய்
இருக்கலாமே?
ஓடிக்க்லோனை தலையில் பூசிய படியே. போகலாமே உங்களுக்கு அங்கதானே ஸ்கூல் பார்த்து
வெச்சிருக்கோம்
அடுத்த கிழமையே போகலாம் என்ன என்று அவனுக்கு உடை மாற்றி விட்டுவிடுகிறேன்.
என் பெயர் நந்தினி கணவர் வசீகரன் மகன் வசுநந்தன். வசீகரன் வன்னியில் அரச
பணியில் இருக்கிறார் நாம் இருவரும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறோம் ஒவ்வொரு
வாரமும் அவர் வந்து செல்வது வழக்கம் நாமும் சேரந்து போகலாம் என
காத்திருக்கிறோம். அவர் தனித்தும் நாம் இங்கும் என இருப்பது எவ்வலவு காலம் என
யோசிக்கிறேன்.
அய்யா அப்பா வந்தாச்சு வந்தாச்சு என ஓடி செல்கிறான் வாசலுக்கு.
அவனை தூக்கிய படி வந்த வசீகர் என்னப்பா நீரும் மழையில் விளையாடினீரே
நல்லாருக்கு. என்று விட்டு வசியுடன் விலையாடிய படியே இரவு உணவுக்கு
தயாரானார்கள்
அம்மா வெள்ளைப் புட்டு கோழியும் செய்யுங்கோ என்றுவிட்டு விளையாடிலேயே
மும்முரமாய் இருந்தான் அப்பாவின் காலையே சுற்றி வந்தான் வசி.
அப்போது தட தட என கதவு தட்டும் சத்தம் பயங்கரமாக இருந்தது.
அப்பா யாரெண்டு பாருங்கோ என சொல்ல வசீகரன் எழுந்து போய் கதவைத் திறந்தார்.
அங்கே சீருடை தரித்த இராணுவத்தினர் நின்று கொண்டிருந்தனர்
விசாரணை என்றனர்.
வசீகரன் வன்னியில் இருந்து வந்திருப்பது தெரிந்ததும் கேள்விகள் அதிகமாயின
விசாரணை இருக்கு என்று அழைத்து போயினர்
வசி அழுதும் எனது அழுகையையும் பொருட்டில்லாது இழுத்துப் போயினர்.
நாம் இருவரும் தனித்து விடப் பட்டோம் இருவரின் கண்ணிலும் கண்ணீர் மழை எனப்
பொழியத் துவங்கியது
வெளியில் மழை நின்றிருந்தது.
மழையும் வெயிலும் மாறி மாறி வந்தாலும் வசீகரன் பற்றி மட்டும் பதிலே இல்லை
அதன் பாட்டுக்கு போகிறது
இப்போது வசிக்கும் பதினொரு வயதாகிறது. மழை பெய்கிறது அதனை ரசிக்கத்தான்
அவனுக்கு இப்போது பொழுது இருப்பதில்லை.
Posted by Thenie at 9:23 PM 2 comments
உலகம் அழியட்டுமே

கண்கள் கனன்றது
காலையில் ஏன் இந்த வெப்பம்
அதிகாலைப் பனியில்
மூழ்கிப் போயிருக்கும் மலர்கள்
ஏன் கறுத்திருந்தன?
கார்காலம் போல்
மூண்டு கொண்ட போர் கோலங்களாலா?
மனிதனே மனிதனை எரிக்க
கண்டு கொண்ட புது வஸ்துக்களாலா?
மரித்துக் கொண்டிருக்கும் மனிதனை
வெறுத்து ஒதுக்க துவங்கிய
ஒளிமுதலின் வேலையோ?
கொஞ்சம் கொஞ்சமாய் பற்றுகிறது உலகம்.
உறக்கத்திலிருந்து விழிக்கிறது வீடுகள்
அடுத்த வீட்டில் எரிவது பார்த்து
அறைக்குள் கதவடைக்கிறது சுயநலம்
மெல்ல மெல்லமாய் தீச்சுவாலையாகிறது
சேர்த்து வைத்த பணத்தை
எண்ணி எடுத்துக் கொண்டு ஓடுகிறது
ஊழலில் விழைந்த கூட்டம்
அவர்களை அறியாதே தொடர்கிறது தீ
லஞ்சம் வாங்கி காணி சேர்த்தவர்
கண் முன்னே எரிவது கண்டு
லஞ்சம் கொடுத்தவன் வயிறு போல புகைந்தார்
உலகம் அக்கினிக்குள் முழுவதுமானது
அக்காளை கூட விட்டு வைக்காது
காமாக்னி வளர்த்தவன் சுதாரிப்பதற்குள்
படுக்கையிலும் பற்றிக் கொண்டது
நின்று கொன்றது அக்கினி தெய்வம்
இம்சைகள் கொண்ட உலகம்
சில்லு சில்லாய் வெடிக்கப் போகிறது
அக்கினியின் சிறகுக்குள் உலகம்!
குழந்தை சிரிப்புடன் இயற்கை வனப்புடன்!
Posted by Thenie at 9:13 PM 0 comments
கட்டிப் போட்டு காதல் செய்கிறாய்
கவிதை கவிதை என
உன்னைப் படுத்தியதில்
நீ வாங்கி கொடுத்த
பாரதியார் கவிதைகள்
படிக்கப்படாமலே இருக்கிறது
உன்னால் படிக்கப்படாத என்னைப் போலவே
ஒரே ஒரு கவிதை
எழுதி தா என்றேன்
வெறும் நிமிட செலவில்
நீ எழுதியது
நம்முடைய இணைந்த பெயர்கள்
'எனக்காக என்ன தருவாய் '
ஆவலாய் கேட்டு நின்றேன்
அலட்சியமாய் ஒன்றும் இல்லை என்றாய்
சோர்ந்து போய் குனிகையில்
''நானே நீ தானே
நமக்குள் ஏது பாகப்பிரிவினை'
என காதல் செய்கிறாய் நீ
Posted by Thenie at 9:12 PM 2 comments
உன்னை ரசிக்கிறேன்
உனக்கும் எனக்கும்தான்
எத்தனை முரண்பாடுகள்
ஆனாலும்
உனை விட்டு விலக மட்டும்
காரணம் கிடைத்ததே இல்லை
எப்போதாவது நீ
கோபத்தில் பேசாதிருந்தால்
அன்று மட்டும்
உலகமே நின்று விடுகிறது எனக்கு
இரு இரு என்று
இருட்டும் வரை பேசிவிட்டு
வீடு வரை போவாயா என
பத்தாயிரம் தடவை நீ கேட்பதில்
தெரியும் தவிப்பில்
இருக்கிறது காதல்!
வேண்டாம் வேண்டாம் என்றே
பேசிய பொழுதுகள்
புலர்வது தெரியாமல்
முடிந்த இரவுகள்
அறிந்த காதலை
நாம் ஒத்துக் கொண்டதே இல்லை
கேலி பேசிய காவலருக்கும்
மாமா என கட்டிக் கொண்ட
பக்கத்து வீட்டு சிறுமிக்கும்
நீ எனக்கு யார் என்று
தெரிந்திருந்ததை புரிந்துகொள்ள
நாட்கள் தேவைப்பட்டன எனக்கு
Posted by Thenie at 9:05 PM 0 comments
உன்னை ரசிக்கிறேன்
நீ குழந்தையாகிறாய் அடிக்கடி
அங்கே நில்
அதை செய்யாதே
பேசாது வா
கண்டிப்புகளுடன் நான்
எத்தனை முறை
கோபித்தாலும்
அத்தனை முறை
நெருக்கமாகிறாய் நீ
எவ்வளவு சொன்னாலும்
அடம்பிடிக்கும் குழந்தையாவே
சாதித்துக் கொள்கிறாய் நீ
உன்னை கண்டித்தே
தளர்ந்து போகிறேன் நான்
Posted by Thenie at 9:04 PM 0 comments
உன்னை ரசிக்கிறேன்
திரும்பிப் பார்த்தால்
திரும்பி வருவேன்
திரும்ப திரும்ப அடம் செய்கிறாய் நீ
திரும்பிப் பார்க்காமலே
கூட வர மாட்டாயோ
மனம் கேட்கிறது
போ போ என்று துரத்தும் போதெல்லாம்
போகாமல் சிணுங்குகிறாய்
மீசை வைத்த குழந்தயாய்
அள்ளி அணைக்க கைகள் பறந்தாலும்
அரக்கியாகவே துரத்துகிறேன் உனை
பேசி முடித்த பின்னும்
மறந்துட்டேன் என நீ
அழைத்துப் பேசும் எதுவுமே
புதிதாக இல்லாத போதும்
தவிர்க்க முனைந்ததில்லை நான்
நடு நிசியில் ஆரம்பிக்கும்
காலை வணக்கம்
பகல் பன்னிரண்டிலும்
முடியாது தொடர்வது
உன்னால் மட்டுமே முடிகிறது
Posted by Thenie at 9:01 PM 0 comments
உன்னோடு வாழத்தானே உயிர் வாழ்கிறேன்
உன்னைப்பற்றி எழுதவென
வார்த்தைகள் தேடினேன்
மெல்லமாய் அருகில் வருகிறாய்
தள்ளிப்போ என சொல்லி
எழுதுகோல்களை நகர்த்தினால்
கைகளை பற்றிக் கொள்கிறாய்
அதிகமாய் எழுதாதே
கண்படும் என்கிறாய்
"கண்பட்டதால் தானே காதல்"
சொல்லி சிரிக்கிறேன்
எதற்கு இந்த கிறுக்கல்
கேட்டு பேனாவை பறிக்கிறாய்
நீ எனக்கு மட்டும்
ஒப்பந்தம் இது என்றேன்
அடிமை சாசனம் தருகிறேன் என்று
அர்த்தமாய் அருகில் வருகிறாய்
விழிகளில் விழுங்கிக்கொண்டாய்
வெறுமையாய் கடதாசி காற்றில்!
Posted by Thenie at 8:57 PM 0 comments
தேடல்
காலை விடிகிறதோ இல்லையோ
என்னுடைய தேடல் தொடங்கி விடுகிறது
ஒவ்வொரு முகாம்களிலும்
ரத்த வாசனையுடன் முடிகிறது தேடல்
கையில் பத்திரிக்கை ஆதாரம்
பெயர் சொல்லி தேடவும் ஆளில்லை
அநாதையாய் விடப்பட்ட மக்களுக்கு
ஆதரவுக்கு புன்னகைக்காது தொடரும் என் தேடல்
மருத்துவமனை வந்தும்
நீ காலில்லாமலோ கையில்லாமலோ
உயிர் கொண்டாவது இருப்பாய் என
தேடிக் கொண்டே தொடர்கிறது தேடல்
ஏன் என்ன ஏது என்ற கேள்விக்கெல்லாம்
பதில் தேடி சொல்லி சென்றால்
வெறும் கொடூரப் பார்வையின்
தொடர்தலில் முடிகிறது தேடல்
காயம் கொண்ட குழந்தையும்
எதையோ இழந்த பெண்ணின் பார்வையும்
என்னில் எதையோ எதிர்பார்ப்பது
புரிந்தும் அகற்றிவிட்டு செல்கிறது என் தேடல்
பத்திரிக்கையில் வந்தது பொய்யோ
நீ வந்த சேதி நான் கண்ட கனவோ
முகாம் வாசலில் மண்டியிட்டு
கதறிக் கொண்டே இருக்கிறது என் தேடல்
உன் பெயர் இருக்கவே கண்ட உற்சாகம்
நீரடித்த கோலமாய் விலகிப் போய்விட
தேடிக் கொண்டே இருக்கிறேன் பிணவறையிலும்
Posted by Thenie at 8:55 PM 1 comments
Tuesday, December 23, 2008
முதல் காதல்

மெல்ல தவழ்ந்து வரும்
தென்றல் போல
மனதை வருடிச் செல்லும்
புயலாய் மாறி சில நேரம்
சிதிலமும் செய்யும்
மலரிலும் அழகாய்
முட்கள் தோன்றும்
தேனிலும் அதிகமாய்
பாகற்காய் இனிக்கும்
பேசும் வார்த்தைகள்
மறந்து போக
பேசாத வார்த்தைக்காய்
மனம் தந்தி அடிக்கும்
அமாவாசை இருட்டிலும்
பௌர்ணமி தோன்றும்
வானவில்லும் உடலில்
ஆடையாக மாறிப் போகும்
பெண்ணுக்குள் வெட்கம்
மெல்லவே எட்டிப் பார்க்கும்
கன்னம் ரோஜாவாய்
சிறகுகள் முளைக்கும் முதல் காதல்..
Posted by Thenie at 3:22 AM 5 comments
Friday, November 28, 2008
அசந்தர்ப்பம்..
பிறந்தேன் பெண்ணாக
ஆண்டுகள் பலவற்றுக்கும் முன்னே
கனவுகள் கண்டேன் பலிக்காமலே
வாழ்கிறேன் முதிர்கன்னியாக
ஒவ்வொரு இரவும்
தலைக் குளியலின் முடிவாக
தலையணை நனைக்கும்
வற்றா நதியாக கண்ணீர்
விதவை கூட கொடுத்துவைத்தவள்
எம்முடன் ஒப்பிடும் பொழுது
விதி என்று விட்டுவிடுவர்
விளையாட்டுப் பொருளாய் ஆக்காது
எத்தனைதரம்தான் சிரிப்பது
தலைக்கு மை அடித்தும்
இன்னும் கழியாத பெண்மை
பார்ப்பவரை எல்லாம் கணவனாய்
வரித்து வாழ்ந்த பின்
தட்டிக் கழிக்கும் தபால்கள்
எத்தனையோ பார்த்தபின்
அரிதாரம் போட்டுக் கொண்டேன்
தலைகுனிந்து பலகாரம் கொடுத்தேன்
சேவித்தேன் அரைமனதாய்
நம்பிக்கை இல்லாமல்
பார்க்க விரும்பாத முகமாய்
மறந்து போன மாப்பிள்ளை
சென்று நாட்கள் ஆயின
வழக்கம் போலவே தபால்
கசக்காமல் பிரித்தேன்
பெண்ணைப் பிடித்திருக்கிறது
திருமண ஏற்பாடு செய்யவும்
நம்பிக்கை இல்லாமலே மீண்டும்
மறுபடியும் படித்தும்
இன்னும் நினைவில் வரா
அந்த மாப்பிளை முகம் தவிர
மறுத்த மற்றவர் முகம் எல்லாம்
வந்தன நினைவில்
அசந்தர்ப்பமாகவே..
Posted by Thenie at 3:21 AM 1 comments



