
மெல்ல தவழ்ந்து வரும்
தென்றல் போல
மனதை வருடிச் செல்லும்
புயலாய் மாறி சில நேரம்
சிதிலமும் செய்யும்
மலரிலும் அழகாய்
முட்கள் தோன்றும்
தேனிலும் அதிகமாய்
பாகற்காய் இனிக்கும்
பேசும் வார்த்தைகள்
மறந்து போக
பேசாத வார்த்தைக்காய்
மனம் தந்தி அடிக்கும்
அமாவாசை இருட்டிலும்
பௌர்ணமி தோன்றும்
வானவில்லும் உடலில்
ஆடையாக மாறிப் போகும்
பெண்ணுக்குள் வெட்கம்
மெல்லவே எட்டிப் பார்க்கும்
கன்னம் ரோஜாவாய்
சிறகுகள் முளைக்கும் முதல் காதல்..
Tuesday, December 23, 2008
முதல் காதல்
Posted by Thenie at 3:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
nice one.
especially..
பெண்ணுக்குள் வெட்கம்
மெல்லவே எட்டிப் பார்க்கும்
கன்னம் ரோஜாவாய்
சிறகுகள் முளைக்கும் முதல் காதல்..
but its not applicable for you na :P
but its not applicable for you na :P
ஏன்னா நாந்தான் குழந்தையாச்சே
உங்களது முதல் காதல் சூப்பர்
அந்த வரிகளின் அர்த்தங்கள் ஆயிரம்
வளர்க்க தங்கள் பணி...
நன்றி ரணங்கள்
புகைப்படம் மிக அழகு!
Post a Comment